கௌரவ செயலாளர்,
நீதி அமைச்சு,
இலங்கை நீதி அமைச்சு,
உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி,
கொழும்பு 12.
கனம் செயலாளர் அவர்களே!
நம் அனைவரையும் நேரான பாதையில் செயற்பட இறைவான் துணை புரிவானாக என இறைஞ்சியவனாக...!
30.07.2009 ஆம் ஆண்டு நீதி அமைச்சராக இருந்த கௌரவ மிலிந்த மொரகொட அவர்களினால் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அண்மையில் அவர்களின் பரிந்துரையை அமைச்சுக்கு கையளித்திருப்பதாக அறிந்தோம்.
ஆனால் அக்குழு இரண்டாகப் பிரிந்து இரு பரிந்துரைகளையும், தொகுப்புக்களையும் வழங்கி இருப்பது கவலை தருவதாக அமைந்துள்ளது. அதனடிப்படையில் நாம் அந்த இரண்டு தொகுப்புக்களையும் மீளாய்வு செய்வதற்காக நீதி அமைச்சின் இணையதளத்தினூடாக அவைகள் இரண்டையும் வாச்சித்துப் பார்த்த போது கௌரவ நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் பரிந்துரை முஸ்லிம் சட்டத்திற்கும், பெண்களுக்கான ஒழுக்கத்திற்கும் நேர் முரணான சட்டங்களுமே அதில் அமையப் பெற்றிரு;நதன.
ஆகவே இதற்கு மாற்றமாக இலங்கையின் மூத்த முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அடங்கலாக நீதியரசர்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், முஸ்லிம் பெண் அறிஞர்கள் அடங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் தலைமையிலான குழுவின் அறிக்கை மிக அழகானதாகவும், மார்க்கத்திற்கும், தற்போதைய நடைமுறைக்கு ஏற்றதாகவும், பெண்களின் உணர்வுகளை மதிப்பதாகவுமே இருந்தது.
ஆகவே மேற்படி இரண்டாம் தரப்பினரின் பரிந்துரையை ஏற்று அஙகீகரிக்குமாறு பணிவாய் வேண்டுகிறேன்.
நன்றி
இவ்வண்ணம்
No comments:
Post a Comment